• vilasalnews@gmail.com

பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலகப் பெண்கள் தினம் கொண்டாட்டம்!

  • Share on

தூத்துக்குடி அருகே உள்ள மேல அலங்கார தட்டு, பாண்டியாபுரம்  பகுதியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலகப் பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் இணைப்பு குழு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமை வகித்தார். மேல அலங்காரத் தட்டு சக்தி வரவேற்புரை ஆற்றினார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய், மேல அலங்கார தட்டு ஊர் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், கோவில்பட்டி பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மேரிஷிலா, 

மேல அலங்கார தட்டு பெண்கள் இணைப்பு குழு முத்து சந்தனம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் பாரதிராஜா, ஆழ்வார்குறிச்சி பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுலோச்சனா, களக்காடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, மேல அலங்கார தட்டு கவிதை பிரிவு பெண்கள் இணைப்பு குழு அனுசியா, கீழ அலங்கார தட்டு பாடல் குழு பெண்கள் இணைப்பு குழு ரோஸ்லின் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

முடிவில் மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்பு குழு அந்தோணியம்மாள் நன்றி கூறினார்.

  • Share on

அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து மதிமுக நிர்வாகிகள் மனு!

தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல கூட்டம் : அமைச்சர், மேயர் பங்கேற்பு!

  • Share on