பிரையண்ட்நகர் மேற்கு பிராதன சாலையில் புதிய தார் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, கட்டபொம்மன்நகர் 12வது தெரு நான்கு முனை சந்திப்பு சாலையில் உயர்மின் கோபுர விளக்கு, பிரையண்ட்நகர் மேற்கு பிராதன சாலையில் புதிய தார் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி, மதிமுக தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.