தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து, இன்று அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்வின் போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண் சுந்தர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், கவுன்சிலர்கள் பொன்னப்பன், கந்தசாமி, வட்ட செயலாளர்கள் பாலு, கதிரேசன், செல்வராஜ், முத்துராஜா, சுப்பையா, செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், பாலு, வட்ட பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், தகவல் தொழில்நுட்ப அணி மார்க்கின் ராபர்ட், செந்தூர்பாண்டி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.