• vilasalnews@gmail.com

இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் நீக்கம்... காலை மீண்டும் சேர்ப்பு!

  • Share on

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்றிரவு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கட்சியின் நிலைபாட்டை மீறி செயல்பட்டததற்காக மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு தினேஷ் ரோடி வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து 6 மாத காலம் விலக்கி வைப்பதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் நேற்றிரவு அறிவித்தார்.

இந்நிலையில், மாவட்ட தலைவரின் அறிவிப்பை ரத்து செய்து மாவட்ட இளைஞரனி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்வார் என்று தமிழக பாஜக தலைவரின் ஒப்புதலோடு மாநில பொதுச் செயலாளர் பொன்.வி.பாலகணபதி அறிவித்துள்ளார்.

இரவில் மாவட்ட தலைவரால் நீக்கப்பட்ட நிர்வாகி, காலையில் மாநிலப் பொதுச் செயலாளரால் சேர்க்கப்பட்ட சம்பவம் மாவட்ட பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி கட்சியில் இருந்து திடீர் சஸ்பெண்ட்!

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் கீதாஜீவன்!

  • Share on