• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி கட்சியில் இருந்து திடீர் சஸ்பெண்ட்!

  • Share on

கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுவதாக  மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார், ஐ.டி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், பாஜக அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்ற ஜோதி, உள்பட பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தனர். அவர்களை பூங்கொத்து கொடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனால் கடுப்பான பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். தொடர்ந்து, கடந்த மார்ச் 7ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை பாஜகவினர்  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் 'எடப்பாடி ஒரு துரோகி' என போஸ்டர் ஒட்டிய பாஜகவினர், எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்தனர். இதனால் அதிமுக, பாஜகவினர் இடையே சமூக வலைதளத்தில் இருந்த மோதல், பொதுவெளியில் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு பதிலடியாக, அதிமுக பொதுகூட்டங்கள், பேட்டிகளில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடிவந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி தற்போது வகித்தும் வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இவை பாஜக - அதிமுக இடையேயான மோதலுக்கு முற்று தருமா? பார்ப்போம்!

  • Share on

கோரிக்கை மனு அளித்த ஒரே நாளில் நிறைவேற்றி கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் நீக்கம்... காலை மீண்டும் சேர்ப்பு!

  • Share on