• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே போலீசை தாக்கி விட்டு தப்ப முயன்றவர் மீது துப்பாக்கிசூடு!

  • Share on

தூத்துக்குடி அருகே வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற போது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். 

தூத்துக்குடியில் நடைபெற்ற வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான ஜெயப்பிரகாஷ் என்பவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தட்டப்பாறை விலக்கு பகுதி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவரை கைது செய்வதற்காக, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, மற்றும் காவலர் மாணிக்கம் ஆகியோர் சென்ற போது, ஜெயப்பிரகாஷ் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்ற போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜெயப்பிரகாஷ் காலில் காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, மற்றும் காவலர் மாணிக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, மற்றும் காவலர் மாணிக்கம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

கோரிக்கை மனு அளித்த ஒரே நாளில் நிறைவேற்றி கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

  • Share on