தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, சிலுவைப்பட்டி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்கட்சி பொருளாரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் சீனிவாசன், அப்பாத்துரை, கிருபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான காந்தி காமாட்சி, ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளரும் , ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலருமான வீரபாண்டி கோபி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.