• vilasalnews@gmail.com

கே.குமரெட்டையாபுரம் கிராமத்தில் காற்றாலை நிறுவனத்தின் அடங்காத அட்டூழியத்திற்கு எதிராக கிராம பொதுமக்கள் தொடர்போராட்டம்... களத்தில் இறங்கிய முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன்!

  • Share on

விளாத்திகுளம் அருகே கே.குமரெட்டையாபுரம் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் காற்றாலை நிறுவன உயர் அழுத்த மின்கம்பங்களை அகற்றிக்கோரி, கிராம பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரக்கூடிய நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இன்று நடைபெற்று வரக்கூடிய அறவழிப்போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கே.குமரெட்டையாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, கே.குமரெட்டையாபுரம் கிராமத்தில் JSW என்ற தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அந்நிறுவனம் உயர் அழுத்த மின்கம்பங்களை அமைத்து வருகின்றது. அந்த மின் கம்பங்களானது ஊரின் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அக்கிராம பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் சுமார் 33 கிலோ வாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பதால், தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் விரும்பதகாத உயிர் சேதம் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கூறி, இந்த உயர் அழுத்த மின்கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைத்திட வலியுறுத்தி, கே.குமரெட்டையாபுரம் கிராம பொதுமக்கள் மார்ச் 3ஆம்  தேதி தங்களது வீடுகளை பூட்டிவிட்டு, ஊரில் இருந்து வெளியேறி ஊரணியில் குடியேறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்பு மார்ச்  8 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில்  காற்றாலை நிறுவனத்திற்கும் கே. குமாரரெட்டையாபுரம்  பொது மக்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து மார்ச் 9ம் தேதி ஊரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஒப்படைத்து மனு கொடுக்க சென்றனர்.  அப்பொழுது கோட்டாட்சியர் இல்லாததால் அலுவலக  அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மனுவை  பெற்றுக் கொண்ட அதிகாரி காற்றாலை நிறுவனத்தின் பணிகளை குடியிருப்புக்குள் செல்லாமல்  இருக்க வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து  உரிய நடவடிக்கை எடுக்கிறேன் அதுவரை எந்த பணிகளும் நடைபெறாது என கூறினார். 

ஆனால் மார்ச் 10ம்தேதி வழக்கம் போல் காற்றாலை நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன இதனை அறிந்த ஊர் பொதுமக்கள்  காற்றாலை நிறுவனத்தின் பணியினை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கே. குமாரரெட்டையாபுரத்தில் உள்ள தொடக்கப்  பள்ளிக்கு சென்ற குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவ்வாறு, கிராம பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்க நடத்திவரும் நிலையில், இன்று ( மார்ச் 11ம் தேதி ) கே.குமரெட்டையாபுரத்தில் கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அமர்ந்து அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, போராட்ட களத்திற்கு நேரில் சென்ற விளாத்திகுளம்  தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது!

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

  • Share on