ஸ்ரீவைகுண்டம் அருகே கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், பானை, கேஸ் அடுப்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் போலீசார் நேற்று (06.03.2023) ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பத்து பகுதியை சேர்ந்த பாதாளம் மகன் ரமேஷ் (36) என்பவரின் வீட்டில் சோதனை செய்ததில், அங்கு அவர் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் ரமேஷை கைது செய்து அவரிடமமிருந்த 100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், ஒரு கேஸ் ஸ்டவ், ஒரு பானை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.