தூத்துக்குடி டூவிபுரம் 2 வது தெருவில், பாஜக தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாஜக தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மான்சிங் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மேற்கு மண்டல துணைத்தலைவர் காசிலிங்கம் கட்சி வளர்ச்சிக்காக, தனது சொந்த நிதியை தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கூட்டத்தில், தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சனா, வைரவன், மாவட்ட செயலாளர்கள் சங்கர நாராயணன், சண்முகராஜா, மேற்கு மண்டல தலைவர் பொன்வேல், துணைத்தலைவர் காசிலிங்கம், செயலாளர் பாலு, சரவணன், கிழக்கு மண்டல தலைவர் சந்தணராஜ், தெற்கு மண்டல தலைவர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.