தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் மற்றும் நீரழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் மோகன்ஸ் நீரழிவு சிறப்பு மையம் இணைந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 31வது வட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெருவில் வைத்து இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் நீரழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கனகராஜ், 31 வது வார்டு திமுக வட்ட செயலாளர் பாலு செய்திருந்தனர்.
இதில், வட்ட பிரதிநிதி பெருமாள், அவைத்தலைவர் வேலாயுதம், துணைச்செயலாளர் சுந்தர்ராஜ், வழக்கறிஞர் பெரியசாமி, இளைஞரணி சுரேஷ், ஸ்ரீதர், பகுதி பிரதிநிதி கருப்பசாமி, ஜெலின், மற்றும் 31 வது வட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.