• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன் பறக்க தடை - மாவட்ட ஆட்சியர்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை தர இருப்பதால், வருகிற மார்ச் 7ம் தேதி டிரோன் போன்ற கருவிகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 07.03.2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை தர இருப்பதால், தூத்துக்குடி மாவட்ட எல்கையான ஸ்ரீவைகுண்டம் வட்டம், வசவப்பபுரம் கிராமத்திலிருந்து தூத்துக்குடி வட்டம் மறவன்மடம் கிராமம் (சத்யா ரிசார்ட்) மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரையிலான பகுதிகளில் 07.03.2023 அன்று காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது. 

உத்தரவினை மீறி டிரோன் போன்ற கருவிகள் பறக்கவிடப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிரோன் கருவிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே ஊருக்குள் இருக்க பாதுகாப்பு இல்லை... வீடுகளை வீட்டு வெளியேறிய கிராம பொதுமக்கள்!

தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

  • Share on