• vilasalnews@gmail.com

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை - தூத்துக்குடியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

  • Share on

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி சந்திரம் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், அருணாசலம், ரஞ்சிதம் ஜெபராஜ், கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் அண்ணாமலை, பாண்டி, வார்டு தலைவர்கள் தனுஷ், மகேந்திரன், மகாலிங்கம், இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மெர்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

சிலிண்டர் விலை உயர்வு - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கண்டனம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

  • Share on