கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசிற்கு தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது:-
வீட்டு உபயோக சிலிண்டர் இன்று ( மார்ச் 1 ) 1068ல் இருந்து ரூபாய் 1,118 ஆக 50 ரூபாய் உயர்த்தி ஏழை - எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்றிய மோடி அரசு கொடுத்துள்ள இச்செயல் கண்டத்திற்குரியது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ 400க்கு விற்க்கபட்ட சிலிண்டர் விலை இன்று ரூபாய் 1,118 விற்கு படுகிறது. இது தான் ஒன்றிய மோடி அரசின் சாதனை. மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர அரசுக்குகாக மக்கள் அல்ல. எனவே இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையேன்றால், மக்களுக்காக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.