• vilasalnews@gmail.com

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - பிரையண்ட் நகர் பகுதி திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

  • Share on

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதி திமுக சார்பில், தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்தநிலையில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகரன் ஆகியோரது வழிகாட்டுதல் படி, தூத்துக்குடி மாநகரில் 44 வது வட்ட திமுக மற்றும் பிரையண்ட் நகர் பகுதி திமுக சார்பாக கட்சி கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி  கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பால்சாமி,  பகுதி பிரதிநிதிகள் சுகன்யா செந்தில்குமார் செல்வம், கோபால், மயிலேறும் பெருமாள், தங்க மாரியப்பன், கணேசன், பெனில் ரவி, 44வது வட்ட நிர்வாகிகள் வெற்றிராஜன், சுடலைக்குமார், கிறிஸ்டோபர், சரவணன், சத்தியபாலன், முருகன், ஆறுமுககிளி  உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி திடீர் மழை - எங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

சிலிண்டர் விலை உயர்வு - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கண்டனம்!

  • Share on