தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பகுதியில் புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆ.சண்முகபுரம் பகுதியில் ஆரம்பித்து பூபாண்டியாபுரம் பிரதான கால்வாயில் முடியும் புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட கவுன்சிலர் அருண்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ் பாலன், தொம்மை சேவியர், மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், கிளைச் செயலாளர்கள் கதிர்வேல், ராஜ், சேகர், முருகன், காசி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் ஜெபசி, கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.