தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனப் பந்தயங்களில் ஈடுபடுவர்கள், இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்தி அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஒட்டுதல், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை உபயோகித்து வாகனம் ஓட்டுதல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்கவிட்டு வாகனம் ஓட்டுதல், தடை செய்யப்பட்ட ஹேண்டில்பார் மாற்றி ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணியாமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் செல்வது, இருசக்கர வாகனங்களில் 3 பேராக செல்வது ஆகிய போக்குவரத்து வீதிமிறல்களில் ஈடுபடுவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபாரதம் விதிக்கப்படும் எனவும்,
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டப்படி, மோட்டார் வாகனங்களில் சாலைகளில் பந்தயங்களில் ஈடுபட்டால் (Racing) முதல் முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 5000 அபராதமும், இரண்டாவது முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதமும்,
இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்தி அதிக ஒலி எழுப்பிச் செல்பவர்கள் (Alteration of Loud silencers) மற்றும் வாகனங்களில் ஹேண்டில்பார் போன்றவற்றை மாற்றி (Retrofitting of motor vehicle parts) வாகனங்களை பயன்படுத்துவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதமும்,
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் (Use of handheld communication devices while driving) முதல் முறை ரூபாய் 1,000 அபராதமும், இரண்டாவது முறை ரூபாய் 10,000 அபராதமும்,
மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு (Drunk and Driving) ரூபாய் 10,000 அபராதமும்,
காப்பீடு இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் (without insurance) முதல் முறை ரூபாய் 2,000 மும், இரண்டாவது முறை ரூபாய் 4,000 அபராதமும்,
இருசக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தால் (Triples) ரூபாய் 1,000 அபராதமும்,
இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டினாலும் (without helmet), நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினாலும் (without seat belt) ரூபாய் 1,000 அபராதமும்,
பதிவு செய்யப்படாத வாகனங்களை பயன்படுத்தினால் (Without registration) முதல் முறை ரூபாய் 2,500 ம் இரண்டாவது முறை பயன்படுத்தினால் ரூபாய் 5,000 அபராதமும்,
அபாயகரமாகவும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் (Driving dangerously - Rash and Negligent Driving ) வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூபாய் 1,000/-மும், இரண்டாவது முறை ரூபாய் 10,000 அபராதமும்,
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் (without driving license) வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.