ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று ( 25.2.23 ) மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்றோடு அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரமும் மாலை 5 மணியுடன் முடிகிறது. அதனால் இறுதி நாள் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ள அதிமுக வேட்பாளரான கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திர மூர்த்தி, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், 39 வட்ட செயலாளருமான திருச்சிற்றம்பலம், மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வட்ட செயலாளருமான மணிகண்டண், தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர்அணி இணைச்செயலாளர் டைகர் சிவா உள்ளிட்ட மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.