• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட  2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 18.01.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி முனியசாமிநகர் பகுதியில் வைத்து தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த உச்சிமாகாளி மகன் பாண்டி (60) என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி செல்சினி காலணியை சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் (26) என்பவரை தூத்துக்குடி தென்பாகம்  காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

அதேபோன்று கடந்த 20.01.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் வைத்து புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மகாராஜன் (45) என்பவரை முன்விரோதம் காரணமாக கட்டையால் கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த சந்திரன் மகன் மாரிமுத்து (46) என்பவரையும்  தூத்துக்குடி தென்பாகம்  காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இரண்டு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபாகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி செல்சினி காலணியை சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் மற்றும் தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த சந்திரன் மகன் மாரிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் செல்போன் வழிப்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்!

  • Share on