• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் செல்போன் வழிப்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

  • Share on

தூத்துக்குடியில் செல்போன் வழிப்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 19.01.2023 அன்று தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூபாண்டியபுரம் பகுதியில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ரத்தினம் (65) என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து ரத்தினத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துராஜ் மகன் அந்தோணி சூர்யா (22) மற்றும் மாரிமுத்து மகன் சக்திகுமார் (19) ஆகிய இருவரையும் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

மேற்படி இவ்வழக்கில் அந்தோணி சூர்யா மற்றும் சக்திகுமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துராஜ் மகன்  அந்தோணி சூர்யா மற்றும் மாரிமுத்து மகன் சக்திகுமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மேற்படி 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Share on

திருச்செந்தூர் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை!

தூத்துக்குடியில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on