கோவில்பட்டியில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, எட்டயபுரம் அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (பிப்.10) இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு, கோவில்பட்டியில்,
சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் மற்றும் எட்டயபுரம் பேரூராட்சி வார்டு செயலாளர்கள் சிவ சங்கர பாண்டியன், கார்டன் பிரபு, சின்னத்துரை, கன்னியப்பன், கருப்பசாமி, சொக்கன், மோகன், எட்டயபுரம் மகளிர் அணி நிர்வாகிகள் செல்வி, சாந்தி, ரத்தினம் உள்ளிட்டோர் பூங்கொத்து வரவேற்பு அளித்தனர்.