• vilasalnews@gmail.com

புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழா - ஆட்சியர், மேயர் பங்கேற்பு!

  • Share on

தூத்துக்குடியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர், மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று (8.2.2023) திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்தார். 

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு, புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி துறை சார்ந்த அலுவலர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே கோவில் பூட்டை உடைத்து திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் தாசில்தார் வீட்டின் முன்பு அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்!

  • Share on