• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக தினேஷ் குமார் இன்று ( 5.2.23 ) ஞாயிற்றுகிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிவந்த சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, திண்டுக்கல் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி )  தினேஷ் குமார், தூத்துக்குடி புதிய மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் 21 வது ஆணையராக தினேஷ் குமார் இன்று ( 5.2.23 ) ஞாயிற்றுகிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தூத்துக்குடி எம்பி, அமைச்சர்கள், மேயர் ஆகியோரது ஒத்துழைப்போடு மாநகராட்சியின் அனைத்து விதமான அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியத்தும் கொடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளித்து செயலாற்றுவேன். என தெரிவித்தார்.

  • Share on

ஓட்டப்பிடாரத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தோடு சேர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் - ஊராட்சி ஒன்றிய அதிகாரி மீது விவசாய சங்கம் புகார்!

அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் : தூத்துக்குடியில் காங்கிரஸ் நாளை போராட்டம்!

  • Share on