• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தோடு சேர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் - ஊராட்சி ஒன்றிய அதிகாரி மீது விவசாய சங்கம் புகார்!

  • Share on

தனியார் சோலார் காற்றாலை நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து, விவசாயிகள், பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்கம் தலைவர் கொம்புமகாராஜா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :-

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மாலில் மேல மீனாட்சிபுரம், மேல சுப்பிரமணியாபுரம், மேல லட்சுமிபுரம், மேட்டூர், முப்புலிவெட்டி ஆகிய பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, நீர் வழிபாதை, நிலவியல் ஓடைகள், வண்டிபாதைகளை ஆக்கிரமித்து தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் Green Infra Energy Private Ltd, தளவாய்புரம் Reneable Resource Private Ltd, மற்றும் Sema Power போன்ற தனியார் சோலார் காற்றாலை நிறுவனங்களோடு ரகசிய ஒப்பந்தம் மூலம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்ட விரோத உத்தரவை பிறப்பித்து எங்கள் பகுதி விவசாயிகள், பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி உள்ள ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெங்கடாசலம் அவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • Share on

தொடர் திருட்டு... தொடரும் வழக்குகள்... அடங்காத 2 பெண்கள் கைது!

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு!

  • Share on