ஸ்ரீவைகுண்டம் அருகே தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (02.02.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சிவராமலிங்கம் (எ) பெரியவன் (31) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் சிவராமலிங்கம் (எ) பெரியவனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சிவராமலிங்கம் (எ) பெரியவன் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி வடபாகம், நாசரேத் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 10 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல், முன்னீர்பள்ளம், சுத்தமல்லி பாப்பாக்குடி, ஆலங்குளம், சீதபற்பநல்லூர், வீரவநல்லூர், களக்காடு, சேர்ந்தமரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உட்பட 15 வழக்குகளும், திருநெல்வேலி மாநகரத்தில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், திருநெல்வேலி டவுன், மருத்துவக் கல்லூரி காவல் நிலையம் மற்றும் பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 6 வழக்குகளும், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வளர்க்கும் என 34 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.