• vilasalnews@gmail.com

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர்

  • Share on

விவசாயிகள், தங்களது கால்நடைகளை தடுப்பூசி செலுத்தி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  தெரிவித்தார். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் ஊராட்சி காலாங்கரை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடைபெற்று வரும் இருவார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

அதனையடுத்து அவர் தெரிவித்ததாவது:

மாவட்டம் முழுவதும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளுக்கான பிரிசெல்லோசிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் மற்றும் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

பிரிசெல்லோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மனிதர்களுக்கும் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மாடுகளுக்கு குறிப்பாக 4 முதல் 8 வாரம் உள்ள கன்றுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். இந்த வாரம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வட்டாரம் மற்றும் கிராமத்திற்கு கால்நடை மருத்துவர்கள் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.  

பிரிசெல்லோசிஸ் தடுப்பூசி 44,000 டோஸ்கள் மற்றும் கோழி கழிச்சல் தடுப்பூசி 1.50 இலட்சம் டோஸ்கள் நமது மாவட்டத்திற்கு வந்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதலான டோஸ்கள் பெறப்பட்டு வழங்கப்படும். எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகள் மற்றும் கோழிகளுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குநர் டாக்டர் சங்கர நாராயணன், உதவி இயக்குநர் டாக்டர் ஜோசப் ராஜ், புதுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் ஆனந்த ராஜ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கால்நடை உதவி மருத்துவர் பெரியசாமி, கால்நடை ஆய்வாளர்கள் நாகூர் மிரான், செல்வராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சரஸ்வதி, ஆய்வக உதவியாளர்கள் லீலா ரோஸ், ஜெனிபா, மற்றும் விவசாயிகள், கிராம பொதுமக்கள், கால் நடை வளர்ப்போர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரியாதை!

ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on