• vilasalnews@gmail.com

திருச்செந்தூா் கோயிலில் தைப்பூச திருவிழா : அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு

  • Share on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீா்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது. 

12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை நடைபெற்று கோயில் திருக்காப்பிடப்படும். பிற்பகலில் உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சோ்கிறாா்.

சண்முகா் ஆண்டு விழா:  பிப். 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமி சண்முகா் கடலில் கண்டெடுத்த நாள் மற்றும் பிப். 4-ஆம் தேதி சனிக்கிழமை திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரியாதை!

  • Share on