தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று வீசி வருவதால், தமிழக தென்கடலோர மீனவர்கள் கடலுக்குச் செல்ல கடந்த இரண்டு நாட்களாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது.