• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

விளாத்திகுளம் அருகே போடாத சாலையை போட்டதாக கணக்கு - நிதியை சுருட்டியது யார்?

  • Share on

விளாத்திகுளம் அருகே போடாத சாலையை போட்டதாக கணக்கு காட்டி நிதியை சுருட்டிய சம்பவம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இ.வேலாயுதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இ.சி.ஆர் ரோட்டில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தென்புறப்பாதை 180 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் போடப்படாத சாலையானது போட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வந்த தகவலால் கிராம மக்கள் அதிர்ச்சி.

மீரான் பாளையம் தெருவை சேர்ந்த முத்து செல்வம் என்பவர் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  மேல்மந்தை ஊராட்சியில் இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்குப் பகுதியில் உள்ள மேல தெருவில் மயான பாதை ரோடு அமைத்தது தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேட்டு இருந்தார்.

இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தகவலில், இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்குப் பகுதியில் உள்ள மேல தெருவில் மயான பாதை  அமைக்க  5.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும். அச்சாலை தென்புற பாதையில் 180 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலத்தில் போடப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கபட்டு உள்ளது.

மேலும், இ.சி.ஆர் தென்புற பாதையானது பேவர் பிளாக் சாலை 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் 2020 -21 திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவரங்களை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அம்மாதிரியான மயான சாலை அமைக்கபடவில்லை எனவும், கம்புகள், குத்து கற்கள் மட்டும் நடப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பொட்டல்காடு துவக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா - ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

  • Share on

அண்மை பதிவுகள்