• vilasalnews@gmail.com

பொட்டல்காடு துவக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா - ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் அடிக்கல் நாட்டினார்

  • Share on

தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தில் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில்  பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், முள்ளக்காடு ஊராட்சி, பொட்டல்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 புதிய வகுப்பறைகள் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜோசப் ஜஸ்டினியன் மரியா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பொறியாளர் தளவாய், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் தேவி, மரிய ஜெயஷீலா, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் செல்வி, மரிய ஜோஸ்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிரேஸ் ஜெயந்தி ராஜகுமாரி நன்றியுரையாற்றினார்.

  • Share on

பட்டா வழங்க அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திர மூர்த்தி கோரிக்கை!

விளாத்திகுளம் அருகே போடாத சாலையை போட்டதாக கணக்கு - நிதியை சுருட்டியது யார்?

  • Share on