• vilasalnews@gmail.com

பட்டா வழங்க அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திர மூர்த்தி கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாமன்ற சாதாரண கூட்டமானது 30.1.23 அன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

கூட்டத்தில், மாமன்ற எதிர்க்கட்சி அதிமுக கொறடாவும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்:-

தூத்துக்குடி மாநகர பகுதியில் 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடியிருப்புகளுக்கு பட்டா ஏற்படுத்தி தர வேண்டும், உப்பு இலக்காவிற்கு   பாத்தியப்பட்ட பெரியசாமி நகர், ஊரணி ஒத்த வீடு, முடுக்கு காடு, எம்.ஜி.ஆர் நகர், ராஜபாண்டி நகர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட வேண்டும்.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட அனைத்தும் வசதிகளும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

  • Share on

திமுக நிா்வாகி கொலை முயற்சி வழக்கு : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை!

பொட்டல்காடு துவக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா - ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் அடிக்கல் நாட்டினார்

  • Share on