• vilasalnews@gmail.com

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் வெற்றி கொண்டாட்டம்

  • Share on

தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வெற்றியை கொண்டாடும் வகையில்  மாநகர காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி, மக்களிடம் அன்பை விதைக்கின்ற வகையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 2022 செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி 116 நாட்கள், 4080 கிலோமிட்டர், 12 மாநிலம்,2 யூனியன் பிரதேசம் வழியாக 12 பொதுகூட்டம், 100 தெருமுனை கூட்டம், 275க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் நடந்து கொண்டே,100க்கும் மேற்பட்ட உள் அரங்கு கலந்துரையாடல்கள் மூலம், ஏராளமான மக்களை சந்தித்து (29/01/23) அன்று காஷ்மீர் சென்றடைந்து உலக சரித்திர சாதனை புரிந்துள்ளார். 

இதை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியின் அறிவுறுத்தலின் படி ராகுல்காந்தி மக்களுக்கு கடிதம் மூலமாக அனுப்பிய செய்திகளை, துண்டு பிரசுரங்கம் ஆக அச்சிட்டு இன்று (30.01.2023) தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் பொது மக்களுக்கு கொடுத்தனர். 

முன்னதாக ராகுல்காந்தியின் சரித்திர சாதனையை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து காங்கிரசார் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதை தொடர்ந்து மகாத்மாகாந்தி நினைவு தினமான இன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், ஐசன்சில்வா, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், அருணாசலம், பிரபாகரன், மார்க்கஸ், ராதாகிருஷ்ணன், ரஞ்சிதம் ஜெயராஜ், சின்னகாளை, மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், நெப்போலியன்,  ஜோபாய் பச்சேக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மெர்லின் பாக்கியராஜ், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், கிருஷ்ணன், அருண், கருப்பசாமி, ஜெபமாலை, மைக்கேல், பிரபாகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு மாபெரும் மருத்துவ முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

  • Share on