தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில், தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று (30.01.2023) எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30ஆம் தேதி இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலங்களில் அலுவலகப் பணியாளர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழியும் எடுப்பது வழக்கமாகும்.
இந்நிலையில், 30.01.2023 இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில், தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், மாநகராட்சி அலுவலக பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.