தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி கிழக்கு பகுதி வடக்கு சோட்டையன் தோப்பு ஆ.சண்முகபுரம் மேல்பகுதி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க 11வது ஆண்டு விழா ஆ.சண்முகபுரத்திலுள்ள கு.காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில், சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரத்தினக்குமார், பொருளாளர் பெரியசாமி துணைத்தலைவர் சேகர், துணைச்செயலாளர் மெய்யராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ ஆலோசகர் ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.
விழாவில், வியாபாரிகளுக்கு தொழில்கடன் 10 நபருக்கு 5 லட்சம் மற்றும் 300 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் ஆகியவற்றை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கினார்.
மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க மேலாளர் பாலமுருகன், சங்க கௌரவ ஆலோசகர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அர்ஜுன், பல்வேறு சங்க நிர்வாகிகள் செந்தில்ஆறுமுகம், மாரியப்பன் மற்றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.