சக்கம்மாள்புரம் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சக்கம்மாள்புரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், விளாத்திகுளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகப்பிரியா ராஜாராம், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் செல்வஜோதி, விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஒன்றிய பொருளாளர் அருள்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,
மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதி சங்கர், கூட்டுறவு சங்கத் தலைவர் சிவகுரு, கூட்டுறவு சங்க செயலாளர் பார்த்திபன், கிளைச் செயலாளர்கள் பரமசிவம், கந்தசாமி, சுப்பையா, வழக்கறிஞர் மகேஷ் ஆசிரியர், வார்டு செயலாளர் லெனின், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.