• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசுக்கும், அரசியல் சட்டத்திற்கும் புறம்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டுவருவதாக கூறி, அவரை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி உத்தரவுப்படி, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ( 19ஆம் தேதி ) வியாழக்கிழமை காலை  தூத்துக்குடி காமராஜ் கல்லூரி எதிர்புறம் திருச்செந்தூர் சாலையில், மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரபோஸ், ஐசன்சில்வா, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, சிறுபாண்மை பிரிவு தலைவர் மைதீன், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் ஏ.டி.பிரபாகரன், சின்னகாளை, ஜாண்சன், அருணாசலம், மாவட்ட பொது செயலாளர் மைக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அலெக்ஸ், முத்துராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, வெங்கடசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், மனித உரிமைத்துறை மாவட்ட தலைவர் ஜெயராஜ், நிர்வாகி குமார முருகேசன், ஐ.என்.டி.சி.ராஜு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், வார்டு தலைவர்கள் மைக்கேல் பிரபாகர், தனுஷ், மகாலிங்கம், முத்துராஜ், ஜூட்சன், ராஜரத்தினம், விஸ்வநாதன், முருகேசன், மேரி, வெள்ளைச்சாமி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 21ம் தேதி மின்தடை அறிவிப்பு

சக்கம்மாள்புரம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை - மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on