தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழாவில் இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழாவில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் முன்னிலையில் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பொற்ச்செல்வன், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.