• vilasalnews@gmail.com

கீழசெக்காரக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்த பொதுமக்கள்!

  • Share on

கீழசெக்காரக்குடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கீழசெக்காரக்குடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முனிட்டு ஆண்டுதோறும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 17 வது ஆண்டு பந்தயம் இந்தாண்டு வெகுசிறப்பாக நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்மட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

கீழ செக்காரக்குடி வ.உ.சி திடலில் இருந்து பொட்டலூரணி சாலையில் பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டிக்கு 10 மைல்,  சிறிய மாட்டு வண்டிக்கு 6 மைல்,  பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு 4 மைல்  தூரமும் போட்டிக்கான எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட காளைகள் வெற்றியின் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதனை சாலையில் இருபுறமும் நின்ற பொதுமக்கள் ஆரவாரத்தோடு உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

முடிவில், வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்கள் மற்றும் அதனை ஓட்டி வந்த சாரதி, துணை சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரம் மருத்துவ முகாம்!

  • Share on