• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து, நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, திரளான தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு, தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசுக்கும், அரசியல் சட்டத்திற்கும் புறம்பாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி உத்தரவுப்படி, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை ( 19ஆம் தேதி ) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • Share on

எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா : மாலை அணிவித்து மரியாதை!

கீழசெக்காரக்குடியில் மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்த பொதுமக்கள்!

  • Share on