• vilasalnews@gmail.com

எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா : மாலை அணிவித்து மரியாதை!

  • Share on

எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நகர அதிமுக செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் நடுவிற்பட்டி அலங்காரி அம்மன் கோவில் தெருவில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மகளிர் அணி செல்வி, சாந்தி, அவை தலைவர் கணபதி வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சிவசங்கர பாண்டியன், சின்னத்துரை, சொக்கன், மோகன், ஜஸ் முனியசாமி, முனியசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தன்னிகரில்லா தமிழ் சமூக பெருமக்களின் பேராதரவுடன் 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

  • Share on