தூத்துக்குடி மாநகராட்சியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளோடு சமத்துவ பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடி அசத்தினார் மேயர் ஜெகன் பெரியசாமி.
நாளை உலக தமிழ் மக்களின் இல்லங்களில் தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் இன்று, பாரம்பரிய விளையாட்டு போட்டிகளோடு சமத்துவ பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடி, தனிச்சிறப்போடு விழாவை அசத்திய மேயர் ஜெகன் பெரியசாமியின் செயல்பாடு கான்போரை பாராட்டிட செய்தது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 4 அடுப்புகளில் பானைகள் வைக்கப்பட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கலோடு, கரும்பு, மஞ்சள், வாழை தோரணத்தோடு, பல வகையான காய்கனி வகைகள் படையலுடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில், பொங்கல் பானையில் அரிசியிட்டு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.
பின்னர், தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தி அனைவரையும் உற்சாக படுத்தும் விதமாக, பானை உடைத்தல், முறுக்கு கடித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டது.
சுகாதாரம், டெங்குவை ஒழிப்பு, நெகிழி பைகளை தவிர்த்தல், சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்டவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாடல்கள் பாடி பெண்கள் கோலாட்டம் ஆடப்பட்டது.
இவ்விழாவில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின் சூசை, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், ஜாண்;சிராணி, அதிர்ஷ்டமணி, ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் முத்துமாரி, தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பேச்சாளர்கள் சரத் பாலா, இருதயராஜ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பர்ட், பிரபாகர், ஜோஸ்பர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.