தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாநகர் மகிளா காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஏழை,எளிய மக்களுக்கு சேலை, கரும்பு, சர்க்கரை பொங்கல் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டி, சேகர், ஐசன்சில்வா, மாவட்ட செயலாளர் கோபால், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, நிர்வாகிகள் பீரித்தி, தங்கசெல்வி, மாரியம்மாள், தனுஷா, சரவனாதேவி, கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.