• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் பறக்கும் அதிசய தமிழ்நாடு அரசு பேருந்துக்கள்?

  • Share on

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு  பொங்கல், தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில், விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியினர் இன்று ( 14.1.23 ) திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர்கள் நாளை ( 15.1.23)  பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். 

இதனால், இன்று ( 14.1.23 ) திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து தங்களது சொந்த ஊர் செல்வதற்காக,  கோவில் வாசல் பேருந்து நிலையத்தில்  பக்தர்கள் கூடிவருவதால், அங்கு கூட்டம் அலைமோதி வருகின்றது.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோவில் வாசல் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய அரசு பேருந்துக்களுக்காக மணி கணக்கில் காத்திருந்திரும் கிடைக்காத அளவிற்கு போதிய பேருந்து வசதியை மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து கழகமும் செய்யாத அவலநிலை ஒரு புறம் இருக்க, திருப்பூர்,  கோவை, மதுரை மார்க்கங்கள் வழியாக செல்லக்கூடிய பேருந்துகளில், தூத்துக்குடி செல்லக்கூடிய பயணிகள் ஏற முயன்றால், இந்த பேருந்துக்கள் தூத்துக்குடி செல்லாது என தூத்துக்குடி டிக்கட் பயணிகளை ஏற்ற பேருந்து நடத்துநர், ஓட்டுநர்கள் மறுக்கின்றனர். இது குறித்து அங்கு பணியில் இருந்த நேர காப்பாளர், டிக்கட் பரிசோதனை ஆய்வாளர் உள்ளிட்ட போக்குவரத்து கழக நிர்வாகிகளிடம் முறையிட்ட போது,  அவர்களும் தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்ற முடியாது என்றே பதில் அளிக்கின்றனர்.

இதனால், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அங்குள்ள பக்தர்கள், பயணிகள், " தூத்துக்குடி செல்லாமல் எப்படி திருப்பூர், கோவை, மதுரை பேருந்துக்கள் தூத்துக்குடி வழி தடத்தில் செல்கின்றன? திருச்செந்நூர் கோவில் வாசல் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருப்பூர், கோவை, மதுரை செல்லும் பேருந்துக்கள் தூத்துக்குடி வந்ததும் மேலே பறந்து செல்லும் வகையில் அதிசய தமிழ்நாடு அரசு பேருந்துக்களை ஏதும் அரசு கண்டு பிடித்து உள்ளதோ? என நொந்து புலம்பி வேதனையடைந்து கொண்டனர்".

மக்களுக்கான நலனும், சேவையும் மட்டுமே அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அதனையடுத்தே அதற்கு தேவையான பொருளாதார தேவைக்கான செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவை தான் நல்ல ஆட்சியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கான அடையாளம். அதை விடுத்து, அதிக தூர பயணிகளை ஏற்றினால் மட்டும் தான் அதிக வசூல் ஈட்ட முடியும் என்ற பிற்போக்கு தனமான எண்ணத்தோடு, லாபம் என்ற ஒற்றை குறிக்கோளோடு,  மாவட்டத்தின் தலை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடிய பயணிகளை கூட ஏற்க மறுப்பது என்பது ஓர் மனித உரிமை மீறல் செயலாகும். ஆகவே, பொதுமக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் என்பது ஆட்சியாளர்களுக்கான அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர், இது போன்ற விரும்பதகாத செயல்கள் தமிழகத்தில் எங்கும் இனி நடக்காதவாறு உரிய நடவடிக்கையை அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமாக உள்ளது.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!

தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

  • Share on