மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் சரவணக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் கரும்பு, மஞ்சள் மற்றும் பல வகையான காய்கனிகளை வைத்து சமத்துவ பொங்கல் விழா மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், உமா மகேஸ்வரி, தங்க மாரிமுத்து, சேசுராஜா, பெலிக்ஸ், ராணி, ஊராட்சி மன்ற உறுப்பினரும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளருமான ஸ்டாலின், பங்கு தந்தை நெல்சன்ராஜ், பங்கு தந்தை வின்செண்ட், திமுக ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், அந்தோணி செல்வராஜ், ஆனந்த், ஜெயசீலன், மூர்த்தி, கௌதம், ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.