தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஊராட்சி மன்ற கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள பூப்பாண்டியாபுரம் டி.சவேரியார்புரம், மாப்பிள்ளையூரணி ஓம்சக்தி நகர் புதிய முனியசாமிபுரம் ஜோதிபாஸ்நகர், ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணிகளை துரிதப் படுத்த வேண்டும் உறுப்பினர்கள் பகுதியில் நடைபெறுகின்ற தகவல்களை முறையாக உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஆகியோர் கேள்வி எழுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், பொறியாளர் தளவாய், ஆகியோர் முறைப்படுத்தி துரிதமான பணிகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
மாப்பிள்ளையூரணி பகுதியில் பிள்ளையார்கோவில் ஜாஹீர் உசேன் நகர், சமீர்வியாஸ் நகர், பூபாண்டியாபுரம், பாலதாண்டாயுத நகர், ராஜபாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் தார்சாலை பேவர்பிளாக் அமைத்தல் அடிபம்பு அமைத்தல் மற்றும் தளவாய்புரம் குமாரகிரி கூட்டுடன்காடு அள்ளிக்குளம், கோரம்பள்ளம், அய்யன்டைப்பு, மறவன்மடம் சேர்வைகாரன்மடம் குலையன்கரிசல், உள்ளிட்ட 38 பகுதிகளில் புதிய பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 12 பணிகள் மேற்வது என மொத்தம் 42 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, அந்தோணி தனுஷ் பாலன், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆபிரகாம் தனசிங், பொறியாளர் தளவாய், மேற்பார்வையாளர்கள் முத்துராமன் சுப்பிரமணியன், யூனியன் மேலாளர் பாலமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.