அக்காநாயக்கன்பட்டி மற்றும் ஒட்டுடன்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் அக்காநாயக்கன்பட்டி மற்றும் ஒட்டுடன்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிக்குழு பெருந்தலைவர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், வருவாய் ஆய்வாளர் செல்வரேகா, பணி மேற்பார்வையாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐயாத்துரை, ஒட்டுடன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.