• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே கொலை முயற்சி வழக்கு - 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட  2 பேர்  இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 16.12.2022 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரநல்லூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் முருகன் (50) மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் (20) ஆகியோரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கில் முருகன் மற்றும் மாயகிருஷ்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் 1) முருகன் மற்றும் அவரது மகன் 2) மாயகிருஷ்ணன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் மேற்படி நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

  • Share on

மாப்பிள்ளையூரணியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!

ஒரே நபருக்கு இரண்டு முறை வாரிசு சான்றிதழ் : தாசில்தார் மீது வழக்கறிஞர் புகார்

  • Share on