மாப்பிள்ளையூரணி பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,19,33,342 குடும்பங்கள் உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,23,894 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் ரூ.1000 ரொக்கப்பணம், பச்சரிசி, சீனி, முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் விநியோகத்தை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, கிளைச் செயலாளர்கள் காமராஜ், மகாராஜன், அன்பு, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார் மற்றும் கௌதம், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.