தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலெட்சுமி, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், பாலசுப்பிரமணியன், மாநகர மருத்துவர் அணி அமைப்பாளர் அருண்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பவானி மார்சல், ரிக்டா , வட்டச் செயலாளர்கள் சுப்பையா, வன்னியராஜ், மற்றும் மணி, அல்பர்ட், ஜோஸ்பர் , பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.