• vilasalnews@gmail.com

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தென்னங்கன்று - ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் வழங்கினார்!

  • Share on

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்று வழங்கப்பட்டது.

தூத்துக்குடி வட்டாரத்தில் 2022-23ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது குமாரகிரி, தளவாய்புரம், மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, வடக்குசிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கள்பட்டி ஆகிய 6 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு துறைகளின் மூலம் மானியத் திட்டங்கள் ஒரே பஞ்சாயத்தில் நடைமுறைபடுத்திட ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை - உழவர்நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தரிசுநிலங்கள் 10 முதல் 15 ஏக்கர் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில் விளைநிலமாக மாற்றுவதை ஊக்குவித்தல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் வழங்குதல், தென்னங்கன்று வழங்குதல், திரவ உயிர் உரம் விநியோகம், விசைத் தெளிப்பான் விநியோகம் மற்றும் இதர வேளாண் உழவர் நலத்துறை மானியத் திட்டங்களும் இப்பகுதியைச் சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகின்றது.

இதில் ஒரு பகுதியாக மேலத்தட்டப்பாறை கிராமத்தில் குடும்பம் ஒன்றுக்கு தென்னங்கன்றுகள் இரண்டு (முழு மானியம்) வீதம் 300 குடும்பங்களுக்கு வழங்க இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் துவக்கிவைத்து 15க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தென்னங்கன்று நடுதல் மற்றும் பராமரிப்பு குறித்த தொழில்நுட்ப துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேலத்தட்டப்பாறை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான் 50 சத மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மேலத்தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் சிவசண்முகம், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • Share on

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை போலி கையொப்பமிட்டு மோசடி - 4 பேர் கைது!

தூத்துக்குடி அருகே கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி

  • Share on